இன்று வெள்ளிக்கிழமை எகிப்து தலைநகருக்குத் தெற்கே பல சிறுவர்கள் அடங்கலாக கிறித்தவர்கள் பயணித்த பேருந்து ஒன்றின் மீது 3 ஜீப் வண்டிகளில் வந்த முகமூடி அணிந்த தீவிரவாதிகள் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் வரை பலியானதாகவும் 25 பேருக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
எகிப்தின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ அதிகாரிகள் தகவல் படி பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிய வருகின்றது. கடந்த டிசம்பர் தொடக்கம் எகிப்தில் கிறித்தவர்கள் மீது தொடுக்கப் பட்ட 4 ஆவது மிகப் பெரிய தாக்குதல் இது என்பதுடன் இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு போராளி அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் எகிப்தின் சினாய் வளைகுடா பகுதியில் இஸ்லாமிய தேசப் போராளிகள் சமீப காலமாக எண்ணற்ற தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர்.
தலைநகர் கெய்ரோவில் இருந்து 250 Km தொலைவில் மின்யா என்ற பகுதியில் எகிப்தின் மிகத் தொண்மையான கிறித்தவ இனமான கோப்டிக் கிறித்தவர்களில் அன்பா சாமுவேல் என்ற குருகுலத்துக்கு கோப்டிக் கிறித்தவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து மீதே இந்த மோசமான துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப் பட்டுள்ளது. கடந்த முறை நிகழ்த்தப் பட்ட தாக்குதல்கள் போன்றே இன்றைய தாக்குதலுக்கும் ISIS இயக்கம் பின்புலமாக இருக்கலாம் எனப் பரவலாக சந்தேகிக்கப் படுகின்றது.
Home
»
World News
»
எகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பலி
Saturday, May 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment