தமிழகத்தில் 21 புதிய எண்ணெய்க் கிணறுகள் தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனம்
திட்டமிட்டுள்ளது.
இதற்காக தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில்
கிணறு தோண்ட ஓஎன்ஜிசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி
உள்ளது.தமிழகத்தில் சமீப காலமாக விவசாயிகள் மத்தியில் பற்றி எரியும்
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் விவகாரம் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு
பரபரப்பான அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா முழுவதுமாக 31 இடங்களில் சிறிய அளவில் ஹைட்ரோ கார்பன்கள்
இருப்பதாக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம்
நெடுவாசலில் முதற்கட்டமாக பணிகள் துவங்கப்படவிருப்பதாக கடந்த பிப்ரவரி
15-ஆம் தேதி செய்திகள் வெளியாகின. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத்
தெரிவித்து போராட்டம் நடந்து வந்தது.
பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு மாநில முதல்வர் பழனிச்சாமியைச்
சந்தித்த போராட்டக் குழுவினர், தமிழக அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி
அளிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். இந்தத் திட்டத்திற்கு மாநில
அரசு வழங்க வேண்டிய அனுமதிகளை வழங்காது என்று முதல்வரின்
உறுதியளிப்புக்கு பின்னர், இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக
நெடுவாசல் போராட்டக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 21 புதிய எண்ணெய்க் கிணறுகளைத் தோண்ட ஓஎன்ஜிசி
திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர்,
கடலூர் ஆகிய மாவட்டங்களை ஓஎன்ஜிசி தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி
உள்ளது.
Monday, May 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment