ஜேர்மனியின் ஹனோவர் நகரில் கண்டுபிடிக்கப் பட்ட 2 ஆம் உலகப் போரில் போடப்பட்ட குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக அங்கிருந்து அவசர அவசரமாக 50 000 பொது மக்கள் அகற்றப்பட்டுள்ளனர்.
2 ஆம் உலகப்போரில் பல உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக கடும் போரில் ஜேர்மனி ஈடுபட்டதும் அப்போர் முடிவடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட அங்கு பல கிராமப் பகுதிகளில் இன்னமும் வெடிக்காத குண்டுகள் அவ்வப்போது கண்டு பிடிக்கப் பட்டு வருகின்றன. அவ்வகையில் ஹனோவர் நகரில் தற்போது 5 சக்தி வாய்ந்த குண்டுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. அவற்றை பாதுகாப்பாக அகற்றுவதற்காக ஏப்பிரல் தொடக்கம் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் செயற்பட்டு வருகின்றனர். முன்னெச்செரிக்கையாக ஹனோவரில் 50 000 குடும்பங்கள் வெளியேற்றப் பட்டதுடன் ரயில்வே சேவைகளும் தற்காலிகமாக முடங்கியுள்ளது.
இதேவேளை ஜேர்மனி அரசு வெளியேற்றப்பட்ட பொது மக்களை திருப்திப் படுத்துவதற்காக பல கேளிக்கை நிகழ்ச்சிகள், விளையாட்டு, சினிமா மற்றும் அருங்காட்சியகம் என்று ஏற்பாடுகளை ஒழுங்கு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
2 ஆம் உலகப் போரில் போடப்பட்ட வெடிகுண்டுகளை அகற்ற ஜேர்மனியில் 50 000 பொதுமக்கள் வரை வெளியேற்றம்
Monday, May 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment