நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183ஆக அதிகரித்துள்ளது. 103 பேர் காணாமற்போயுள்ளனர். 112 பேர் காயமடைந்துள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 7 மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 183 பேர் பலியாகியுள்ளதுடன், 103இற்கும் அதிகமானோர் காணாமல்போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகளில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவில் புதையுண்டவர்களை மீட்பதில் படையினர் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.
Tuesday, May 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment