Monday, May 8, 2017

வாரவிடுமுறை, அரசு பொது விடுமுறை, கோடை விடுமுறை என 160 நாட்கள் விடுப்பை
பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும்
இந்த விடுமுறை நாட்கள் மற்றும் வேலை நாட்களை பின்பற்றுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.160 நாட்கள் விடுமுறை நாட்களாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. 205 நாட்கள் வேலை நாட்களாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற
வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

2017- 2018ம் கல்வியாண்டில் பள்ளிகள் கட்டாயம் 205 நாட்கள் நடைபெற
வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வாரவிடுமுறை, அரசு பொது விடுமுறை, கோடை
விடுமுறை என 160 நாட்கள் விடுப்புக் கொடுக்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள்
மற்றும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer