Sunday, May 14, 2017

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக் குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வராது என்றிருந்த பணம் வரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். மனநிம்மதி கிட்டும் நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். மற்றவர் களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

மிதுனம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு.கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். ஆடை, ஆபரணம் சேரும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப் பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கடகம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளை களால் மகிழ்ச்சியும், உறவினர் களால் ஆதாயமும் உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புதுமை படைக்கும் நாள்.

கன்னி: தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.

துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக் கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வெளிவட்டாரத் தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும். முகப்பொலிவுக் கூடும். நம்பிக்கைக் குரியவர்கள் உதவுவார்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். புது அத்தி யாயம் தொடங்கும் நாள்.

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.

மகரம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். செலவினங் கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளியூரி லிருந்து நல்ல செய்தி வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியா பாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப் பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. வாகனம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். பெருந் தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer