நாட்டில் தொடர்ந்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி கடந்த இரண்டு நாட்களில் 13 உயிரிழந்துள்ளனர்.
களுத்துறை மாவட்டம் புளத்சிங்கள, போகஹவத்தையில் நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களது சடலங்கள், பிம்புர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மண் சரிவில் சிக்கி 30 பேர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் பல பகுதிகளும் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளன. மழையுடன் கூடிய வானிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, May 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment