இந்திய சினிமா வரலாற்றின் வசூல் சாதனைகளை பாகுபலி 2 படம் திருத்தி எழுதிக்கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு நாளுக்குநாள் இப்படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.உலகம் முழுவதும் இப்படம் முதல் 6 நாட்களில் எல்லா மொழிகளையும் சேர்த்து ரூ. 785 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். தற்போது 1,000 கோடி என்கிறார்கள். ஆனால் அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.
இதன்மூலம் ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த படம் எனும் பெருமையை பாகுபலி அடைந்துள்ளது. ஆனால் இந்த சாதனை இன்னும் கொஞ்ச நாள் மட்டும்தான் பாகுபலி வசம் இருக்கும் என சொல்லப்படுகிறது. காரணம் என்ன தெரியுமா?
ஹிந்தியில் ஆமிர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடி வரை வசூல் செய்த "தங்கல்" படம் விரைவில் சீனாவில் 9,000 திரையரங்குகளில் வெளியாகிறது. எனவே பாகுபலி வசூல் சாதனைக்கு பங்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தங்கல் திரைப்படம் பாகுபலியை உடைக்குமா ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Monday, May 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment