நாட்டில் கடந்த மூன்று நாட்களாக தொடரும் பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுக்குள் சிக்கி 102 பேர் உயிரிழந்துள்ளனர். 100 பேர் காணாமற்போயுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 7 மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 91 பேர் பலியாகியுள்ளதுடன் 110 இற்கும் அதிகமானோர் காணாமல்போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி 14 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் சுமார் 03 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் சுமார் 54,00பேர் இடம்பெயர்ந்து அனர்த்த முகாமைத்துவ நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
இக்காலநிலை தொடர்ந்தும் சில தினங்களுக்கு நீடிக்குமென்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் வாழும் மக்கள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இதனடிப்படையில், களுத்துறையில் களுத்துறையில் 40 பேரும், இரத்தினபுரியில் 36 பேரும் காலியில் 11 பேரும் மாத்தறையில் 04 பேரும் உயிரிழந்திருப்பதாகவும் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இரத்தினபுரி நிவித்திகல பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் 12 பேரின் சடலங்கள் நேற்று மாலை வரை மீட்கப்பட்டன. இதேவேளை புளத்சிங்கள பிரதேசத்தில் மண்சரிவில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீட்பு பணிகளில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவில் புதையுண்டவர்களை மீட்பதில் படையினர் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.
Home
»
Sri Lanka
»
தொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பேர் உயிரிழப்பு, 99 பேரைக் காணவில்லை!
Monday, May 29, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment