Wednesday, May 10, 2017

மேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். யோகா, தியானம் என மனம் செல்லும். மனைவிவழி உறவினர் கள் ஒத்துழைப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோ கத்தில் புது வாய்ப்புகள் வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.    

ரிஷபம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. புதுப்  பொருள் சேரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.  

மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம்  வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். புதுமை படைக்கும் நாள்.

கடகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு  தேடி வருவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நினைத்ததை  முடிக்கும் நாள்.

கன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதியவர்கள் நண்பர் களாவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பாதியில் நின்ற வேலைகள்  முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.  

துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். பணம், நகையை கவனமாக  கையாளுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. வெளி வட்டாரத்தில் நிதானம் அவசியம். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

தனுசு: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.  வேற்றுமதத்தவர் உதவுவர். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மகரம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வீடு, வாகனத்தை சீர்  செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.  

கும்பம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத சில வேலைகள் முடியும். புண்ணிய ஸ்தலங் கள் சென்று வருவீர்கள். உறவினர்கள்  மதிப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். மகிழ்ச்சியான நாள்.    
மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் அலைச் சலின் பேரில் முடியும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer