இரட்டை இலை சின்னத்தைப்பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரனுக்கு உதவியதாக கடந்த வாரம் சுகேஷ் என்ற இடைத்தரகரை டெல்லி காவல்துறை கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி டெல்லி காவல்துறை நேரடியாக வந்து சம்மனை வழங்கியது.
இதையடுத்து கடந்த வாரம் சனிக்கிழமை அன்று நேரில் ஆஜரானார். இந்த விசாரணையானது நான்கு நாட்களாக தொடர்ந்தது. இதையடுத்து இன்று டெல்லி நீதிமன்றத்தில் சுகேஷ், டிடிவி தினகரன் பேசிய ஆடியோ பதிவுகள் சமர்ப்பிக்கப்பட்டது. டிடிவி தினகரனிடம் நேற்று நடத்தப்பட்ட விசாரணையில் சுகேஷ் உடன் பேசியதாக ஒப்புக்கொண்டார்.
நேற்று மாலை 4 வது முறையாக டெல்லி போலீஸ் முன் தினகரன் ஆஐரானார். மாலை 5 மணி முதல் விசாரணை தொடங்கி நடைபெற்று வந்தது.விசாரணையின் முடிவில் நள்ளிரவு 12 மணி அளவில் அவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவருடன் அவரது நண்பர் மல்லிகார்சுனாவும் கைது செய்யப்பட்டார். இந்த குற்றத்திற்கு டிடிவியின் உதவியாளர் சாட்சியமாக இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.
Tuesday, April 25, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment