ஆப்பிள் மற்றும் சாம்சுங் போன்ற முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுக்கு போட்டியாக சிறந்த கைப்பேசிகளை HTC நிறுவனம் அறிமுகம் செய்துவருகின்றது.
இந்நிறுவனம் தற்போது HTC U எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவுடைய QHD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் Snapdragon 835 Processor, பிரதான நினைவகமாக 4 GB RAM, 64/128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவை தவிர 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 12 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, நீடித்து உழைக்கக்கூடிய4,000 mAh என்பனவும் தரப்பட்டுள்ளது.
கூகுளின் Android 7.0 Nougat இயங்குதளத்தில் செயற்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இதன் விலையானது ஏறத்தாழ 750 டொலர்களாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இக் கைப்பேசி எதிர்வாரும் மே மாதம் 16ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
Thursday, April 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment