ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு வெளியிடும் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் தலைநகரில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்விலேயே குறித்த வாக்கெடுப்பில், குறித்த பிரேரணை 317 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வரிச்சலுகை, இலங்கைக்கு வழங்கக் கூடாது என்பது தொடர்பிலான குறித்த பிரேரணைக்கு எதிராக 436 வாக்குகள் அளிக்கப்பட்டதோடு, அதற்கு ஆதரவாக 119 வாக்குகள் வழங்கப்பட்டிருந்தது. இதில் 22 பேர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
Sri Lanka
»
இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச் சலுகை வழங்குவதற்கு எதிரான பிரேரணை தோற்கடிப்பு!
Friday, April 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment