Tuesday, April 4, 2017

Fast And Furious படத்தில் கார்கள் ஏற்படுத்திய சேதங்களின் மதிப்பு மட்டும் 3,400 கோடி ரூபாய் என்று பிரிட்டன் நிறுவனம் தகவல்
வெளியிட்டுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த இன்ஷுரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை வெளியான ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படங்களில், கார்கள் மூலம் உடைக்கப்பட்ட பொருட்களின் செலவு 3,400 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற ஹாலிவுட் திரைபடங்களில் ஒன்றான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், மிகுந்த பொருட்செலவுகள் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க கார் ரேஸ் போட்டிகளை மையப்படுத்தி தயாரிக்கப்படும் இப்படத்தின் சிறப்பே, இதில் இடம்பெறும் சக்திவாய்ந்த கார்களின் சாகச காட்சிகள்தான். இதுவரை இப்படத்தின் 7 பாகங்கள் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வசூலை வாரிக்குவித்து வந்த நிலையில், படத்தின் 8-ம் பாகம் வரும் 14 தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கான கார்களின் சாகசக்காட்சிகள் படம்பிடிக்கும் போது மட்டும் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பை பிரிட்டனை சேர்ந்த இன்ஷுரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், கார்கள் உடைவது, படப்பிடிப்பின் போது கட்டிடங்களில் ஏற்படும் சேதம் ஆகியவற்றுக்கு மட்டும், இதுவரை வெளியான 7 பாகங்களுக்கும் சேர்த்து 3,400 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேசிங் காட்சியின் போது இதுவரை உடைந்த கார்களில் 22.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ’Lykan Hypersport’ ரக கார்தான் அதிக விலையுடையது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer