தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த பாண்டியராஜன் கடந்த வாரம்
ஆர்.கே.நகரில் தேசியக்கொடி போர்த்திய சவப்பெட்டியில் ஜெயலலிதா
உருவம்போன்ற பொம்மையை வைத்து பிரசாரம் மேற்கொண்டார்.
இதுதொடர்பான காட்சி, ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானதால், தொண்டர்கள்
ஆர்வ மிகுதியில் அந்த தவறைச் செய்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.
தேசியக்கொடியை அவமதித்ததாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஓபிஎஸ்
அணி பேச்சாளர் அழகுதமிழ்ச்செல்வி ஆகியோர் மீது காவல்துறையினர்
வழக்குப்பதிவு செய்தனர்.
Home
»
Tamizhagam
»
தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் முன்ஜாமீன் மனு
Tuesday, April 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment