இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா நடித்துள்ள 'வனமகன்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதற்கு பிறகு மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'சார்லி' படத்தின் தமிழ் ரீமேக்கை விஜய் இயக்கவுள்ளார் என முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்த கேரக்டரில் மாதவன் மற்றும் சாய்பல்லவி நடிக்க உள்ளார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது விஜய் 'கரு' என்ற டைட்டிலில் ஒரு த்ரில் படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.'வனமகன்' ரிலீசுக்கு பின்னர் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்க படவுள்ளதாகவும், கூடிய விரைவில் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவர உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Friday, April 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment