சூர்யா, ஹரி கூட்டணியில் வெளிவந்த 'சிங்கம் 3' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணையவிருக்கிறது. சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இதனை தொடர்ந்து ஹரி இயக்கும் படத்தில் அவர் நடிக்க உள்ளார் .
ஆனால் இது சிங்கம் படத்தின் நான்காம் பாகம் கண்டிப்பாக இல்லை என்பதை இயக்குனர் ஹரி உறுதிபட தெரிவித்துள்ளார். புதிய கதை களத்தில் உருவாகும் இந்த படம் போலீஸ் கதை இல்லாத ஹரி படமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.தற்போது விக்ரம், த்ரிஷா நடிக்கும் ‘சாமி-2’ படத்தை இயக்கி வரும் ஹரி... இந்த படத்தின் வேலைகள் முடிந்ததும் சூர்யா நடிக்கும் படத்தின் வேலைகளை துவங்க உள்ளதாக கூறியுள்ளார்.
Friday, April 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment