Wednesday, April 26, 2017

முட்டையின் வெள்ளைக் கருவை விட மஞ்சள் கருவில் தான் விட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

அதிலும் இந்த மஞ்சள் கருவை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி சமைத்து சாப்பிடும் போது சுவையாக இருப்பதுடன் இன்னும் அதிகமான நன்மையைப் பெறலாம்.

முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள விட்டமின் K எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள கோலைன் மன அழுத்தம் மற்றும் அல்சைமர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது.

முட்டையின் மஞ்சள் கருவில் விட்டமின் D மற்றும் செலினியம் போன்றவை மார்பக மற்றும் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

முட்டையில் உள்ளா கோலைன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ரத்த நாளங்களை பாதிக்கும் ஹோமோசைஸ்டீனை ஒழுங்குப்படுத்த உதவுகிறது.

முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடும் போது, நமது உடலில் உள்ள கல்லீரல் கொலஸ்ட்ரால் உற்பத்தியைக் குறைத்து, உடலில் கொலஸ்ட்ராலை சீராக்குகிறது.

முட்டையின் மஞ்சள் கரு ரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரித்து, உடலில் ஆக்ஸிஜன் சுற்றோட்டத்தை ஏற்படுத்தி, பக்கவாதம் மற்றும் உடலின் உட்காயங்களை தடுக்க உதவுகிறது.

முட்டையின் மஞ்சள் கரு கண்களுக்கு மிகவும் நல்லது. அதிலும் வயதான பின் ஏற்படும் பார்வைக் குறைபாடு மற்றும் கண் புரை பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer