Monday, April 10, 2017

சளி தொல்லை, இருமல் போன்ற உடல் ரீதியான பிரச்சனைகளை எளிதில் குணமாக்க அருமையான பாட்டி வைத்தியம் இதோ!

வெந்தயத்தை தேங்காய்ப்பாலில் ஊறவைத்து, அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி உதிர்வு குறையும்.

முருங்கைப் பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், கண் எரிச்சல், வாயில் நீர் ஊறல், வாய்க் கசப்பு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

சிறிதளவு துளசி இலையை எடுத்து அதை இடித்து சாறு எடுத்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் இருமல் பிரச்சனை உடனடியாக குணமாகும்.

சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால், இருமல் பிரச்சனை உடனடியாக நிற்கும்.

தென்னைமரக் குருத்தோலையை நெருப்பில் விட்டு தூள் செய்து, அதை தேங்காய் எண்ணெயில் குழப்பி காலில் செருப்பு கடிபட்ட இடத்தில் தடவி வந்தால், காயம் குணமாகும்.

காய்ந்த திராட்சை பழத்தை பசும்பாலில் ஊற வைத்து பிழிந்து அந்த சாறை வாடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்து வர மலச்சிக்கல் பிரச்சனைகள் ஏற்படாது.

திப்பிலி, கடுகு, சீரகம், சுக்கு, மிளகு, வேப்பங்கொழுந்து, ஆகியவற்றை சேர்த்து அரைத்து நிழலில் காய வைத்து சாப்பிட்டால், ஜலதோஷம் குணமாகும்.

காய்ந்த மஞ்சளை பொடியை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால், கண் எரிச்சல் குணமாகும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer