Tuesday, April 4, 2017

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் அணியினர் இன்று பிரசாத் ஸ்டியோவில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின் போது  விஷாலுடன் நடிகர் பார்த்திபன், பிரகாஷ்ராஜ், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கதிரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்நிகழ்வுக்கு பின்னர் விஷால் பேசிய போது.. இளையராஜா அவர்களுடான இந்த சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் தந்துள்ளது. இளையராஜா அவர்களுக்கு மிக பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்தவுள்ளோம் என்ற தகவலை சொல்வதற்க்காகவே இந்த சந்திப்பு நடந்தது, இது வெறும் நிகழ்ச்சியாக இல்லாமல் . இளையராஜாவிற்கு இந்தியத் திரைப்படத்துறை சார்பில், நாங்கள் அவருக்குச் செய்யும் கடமையாக இருக்கும். அதோடு இந்த விழாவை நாங்கள் நடத்துவது, எங்களுக்குக் கிடைத்த பாக்கியம் என தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சி சென்னையில் நடத்துவதற்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலையும் அவர் பதிவு செய்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer