சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக நெடுஞ்சாலைகள் உள்ள சுமார் 3000 டாஸ்மாக் கடைகள் சீல் வைக்கப்பட்டுவிட்டதால் தற்போது அரசு மாற்று இடம் தேடி வருகிறது.
மாற்று இடங்களில் அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலானவை ஊருக்குள் அமைக்கப்படும் நிலை ஏற்பட்டதால் அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருப்பூர் அருகே மாற்று இடத்தில் மதுக்கடைகளை திறந்ததற்காக பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது வேதாரண்யம் பகுதியிலும் பெண்கள் திரளாக கூடி ஊருக்குள் வைக்க முயற்சிக்கும் மதுக்கடைகளுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதற்காக வித்தியாசமான முறையில் போராட முடிவு செய்த அந்த பகுதி பெண்கள் மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மது குடிக்கும் போராட்டம் செய்தனர். அங்குள்ள பெண்கள் ஆளுக்கொரு குவார்ட்டர் பாட்டிலில் உள்ள மதுவை குடித்து போராட்டம் செய்ததால் போராட்டத்தை கலைக்க முயற்சித்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Thursday, April 13, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment