சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகிலுள்ள ஆறகளூர் சிவன்கோயில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது-34) இவருடைய மனைவி சத்தியா (வயது-30), இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
உள்ளூரில் கேபிள் டி.வி. நடத்திவரும் மாரிமுத்துவுக்கும், அதே ஊரில், இன்னொரு பகுதியில் கேபிள் டிவி தொழில் நடத்திவரும் இராஜேந்திரன் என்பவருக்கும் தொழில் ரீதியாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
சபரிமலைக்கு மாலை போட்டிருந்த மாரிமுத்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கோயிலுக்குச் புறப்பட்டுச் சென்றுள்ளார். அதனால், சந்தியா பக்கத்து தெருவில் இருக்கும் தன்னுடைய தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில், இன்று காலை ஒன்பது மணியளவில், மாரிமுத்துவின் மாமனார் வீட்டுக்கு சென்ற இராஜேந்திரனின் இரண்டாவது மகன் விஜய் (வயது-25) என்பவர் மாரிமுத்துவின் மனைவி சத்தியா மட்டும் வீட்டில் இருந்த நேரத்தில் அங்கு சென்றவர், தான் கொண்டு போயிருந்த கத்தியால் சத்தியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
சத்தியாவின் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டுகாரர்கள் விஜய்யை பிடித்து அடித்து கட்டிப்போட்டுள்ளனர். இந்த தகவல் கேட்டு ஓடிவந்த இராஜேந்திரன், அவருடைய முதல் மகன், இராஜேஷ் (வயது-30) அவருடைய நண்பர் கார்த்தி ஆகிய மூவரும் சேர்ந்து கட்டிப்போடப்பட்டிருந்த தன்னுடைய மகன் விஜய்யை மீட்டுக்கொண்டு போக முயற்சி செய்துள்ளனர்.
இதைப் பார்த்த மாரிமுத்து மற்றும் சத்தியாவின் உறவினர்கள் ஓன்று சேர்ந்து, இராஜேந்திரனுடன் வந்தவர்களையும் பிடித்து அடித்துள்ளனர். அப்போது, மற்ற இராஜேஷ் மற்றும் கார்த்தி இருவரும் தப்பியோடிவிட்டனர். கையில் சிக்கிய இராஜேந்திரன் மற்றும் அவருடைய இரண்டாவது மகன் விஜய் ஆகிய இருவரையும் பிடித்து அடித்து சத்தியா கொலை செய்யப்பட்டு கிடந்த வீட்டுக்கு அருகிலேயே இருந்த இன்னொரு வீட்டில் போட்டுவிட்டனர்.
இந்த நிலையில் தகவலறிந்து வந்த தலைவாசல் போலீசார், கொலை செய்யப்பட்டுக் கிடந்த சத்தியாவின் உடலை எடுக்கவும், இராஜேந்திரன் மற்றும் அவருடைய மகன் விஜய் ஆகிய இருவரையும் வெளியே விடமாட்டோம் என்று கூறி மறியலில் எடுபட்டனர்.
தகவலறிந்து வந்த ஆத்தூர் டி.எஸ்.பி.பொன்கார்த்திகேயன் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு சந்தியாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியதுடன், வீட்டில் அடைக்கப்பட்டிருந்த இராஜேந்திரன் மற்றும் விஜய் இருவரையும் வீட்டின் பூட்டை உடைத்து மீட்டுள்ளார்.
மூன்று மணி நேரத்துக்கும் மேலாக வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த இராஜேந்திரன் வீட்டுக்குள்ளேயே இறந்து விட்டார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஜய் தற்சமையம் அத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இன்னொரு பக்கம் இராஜேந்திரனை அடித்துக்கொன்றதாக இருபதுக்கும் அதிகமானோர் மீதும் தலைவாசல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாரிமுதுவும், இராஜேந்திரனும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், ஊரில் பதட்டம் ஏற்ப்பட்டுள்ளது. இதனால், கூடதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Saturday, April 15, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment