தன்னையும், தன் மனைவியையும் பிரிக்க சதி நடப்பதாக தீபாவின் கணவர் மாதவன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
நேற்று தீபாவுக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், கணவரை தீபா வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து பேட்டியளித்துள்ள தீபாவின் கணவர் மாதவன், எனக்கும் என் மனைவிக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது.
வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்பி விடுகின்றனர், என்னைப்பற்றி என் மனைவியின் மனசாட்சிக்கு தெரியும்.
பேரவையில் இருந்து கொண்டே பேரவையை கலைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள், அவர்களை நான் கண்டுபிடித்துவிட்டேன்.
புரட்சி தலைவர் வழியிலும், புரட்சி தலைவி வழியிலும் தமிழக மக்களின் நம்பிக்கையை தீபா நிறைவேற்ற என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.
எங்களுக்குள் குடும்ப பிரச்சனை எதுவும் கிடையாது, தினமும் வீட்டுக்கு சென்று தீபாவிடம் பேசிவிட்டு வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
Sunday, April 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment