பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு செல்கின்றார்.
அவர் நாளை புதன்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில் சந்தித்துப் பேசவுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்திய மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். அத்தோடு, காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ் விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, இலங்கை – இந்திய பொருளாதார தொழிநுட்ப கூட்டு ஒப்பந்தமான எட்கா குறித்த நான்காம் சுற்று பேச்சுவார்த்தை நேற்று திங்கட்கிழமை புதுடெல்லியில் ஆரம்பமானது. மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள இப் பேச்சுவார்த்தையின் போது எட்கா உடன்படிக்கை தொடர்பான இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கான காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயம் முக்கியத்துவத்தோடு நோக்கப்படுகின்றது.
Wednesday, April 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment