நல்லாட்சி அரசாங்கம், இந்த ஆண்டு எதிர்கொள்ளவுள்ள முதலாவது தேர்தல் பொது வாக்கெடுப்பே என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புத் தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதாகவும், இது இவ்வருடம் நடத்தப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளதாவது, “பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும். புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன், மக்களைத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கூடிய விரைவில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும்.
பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும். சகல மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒரு நாளிலும், சகல உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல்களை மற்றொரு நாளில் நடத்தப்படும்.” என்றுள்ளார்.
Wednesday, April 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment