Tuesday, April 4, 2017

விஷாலுக்கும் தனக்குமான போராட்டத்தில் கடும் எரிச்சலுக்கு ஆளாகிவிட்டார் தாணு. “உம் மூஞ்சு எப்படியிருக்கு பாரு?” என்று விமர்சிக்கிற அளவுக்கு அடிமட்டத்திற்கு போய்விட்டது அவரது பேச்சு.

“போண்டா பஜ்ஜி சாப்புட்டுகிட்டே கட்ட பஞ்சாயத்து பண்ணுறாங்க” என்று கூறி, அதனால் சஸ்பென்ஷன் வரைக்கும் போன விஷாலை நீதிமன்றம் காப்பாற்றி சங்கத்திற்குள் மீண்டும் கொண்டு வந்தது.

இப்போது எங்கு மைக்கை பிடித்தாலும், இந்த போண்டா பஜ்ஜி கட்ட பஞ்சாயத்து விவகாரத்தை எவ்வித தயக்கமும் இல்லாமல் போட்டுத் தாக்குகிறார் விஷால்.

(அதான் கோர்ட்டே விட்டுடுச்சே?) இந்த சுச்சுவேஷனில் தாணு விஷால் நடித்த அத்தனை படங்களையும் லிஸ்ட் போட்டு, “விஷாலை வச்சு படம் எடுத்த இந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் நடுத்தெருவுல நிக்கிறாங்க” என்று தாணு கூறி வருவதை, படு நக்கலடித்துக் கொண்டே கேட்டு வருகிறாராம் விஷால்.

ஏன்? தாணு சொல்லும் லிஸ்ட்டில் விஷாலின் அண்ணன், அப்பா பெயரெல்லாம் இருந்தால் சிரிப்பு வராதா?

0 comments :

Post a Comment

 
Toggle Footer