Friday, April 28, 2017

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். துணைவேந்தர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்காக அண்மையில், உறுப்பினர்களுக்கிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இவர் 14 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார்.

இம்மாதம் 24ஆம் திகதியுடன் முடிவடைந்த தற்போதைய துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக்காலம், மேலும் 1 மாதம் நீடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதிய துணைவேந்தராக பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer