Thursday, April 13, 2017

தினமும் காலையில் வெள்ளை பிரட்டை உணவாக சாப்பிட்டு வந்தால், உடலினுள் ஏற்படும் தீமைகள் இதோ!

பிரட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்ன?

வெள்ளை பிரட்டானது அதிகப்படியான பசியை தூண்டும் எனவே காலை உணவாக பிரட்டை சாப்பிட்டால், உடல் பருமன் அதிகரிக்கும்.

காலை உணவாக பிரட்டை சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது மற்றும் குறைவாக இருப்பதுடன், அதிகப்படியான சோம்பல் தன்மையை உணரக் கூடும்.

வெள்ளை பிரட் ரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிப்பதால், அது நீரிழிவு நோயின் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வெள்ளை பிரட்டில் நார்ச்சத்து ஏதும் இல்லை. எனவே பிரட்டை காலையில் உட்கொண்டால், அது குடலில் நீர்த்தேக்கம் இருப்பதை தடுத்து மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

தினமும் காலையில் பிரட்டை சாப்பிட்டு வந்தால், அது மூளையில் சுரக்கும் மன அமைதி ஹார்மோனான செரடோனினை பாதித்து, மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவை அதிகரிக்கிறது.

1 comments :

  1. Hello



    Thanks for your service to the World Tamil Community.



    I will be thankful if you reduce as much as possible the usage of English words in Tamil text as it reduce my reading ability in Tamil. You may have reasons for using English words in some items.

    Regards




    ReplyDelete

 
Toggle Footer