நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் ‘அதிகாரம்’ கடந்த காலத்தில் அளவுக்கதிகமாக பயன்படுத்தப்பட்டதால் பாராளுமன்றம் பலவீனப்படுத்தப்படடிருந்தது. இதனால் தற்போது பாராளுமன்றத்தை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்று பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான ஆசிய பசுபிக் பிராந்திய இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகைலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளது, “கடந்த ஐந்து வருடங்களில் பொது நிதி கையாளல்களால் நாடு பாரிய கடன்பொறிக்குள் சிக்கியுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் புதிய அரசியலமைப்பொன்றுக்கான தேவை வலியுறுத்தப்பட்டது. இதற்கமைவாக பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வழிநடத்தல் குழுவால் நியமிக்கப்பட்ட உப குழுக்களின் அறிக்கைகள் விவாதிக்கப்பட்டு, இறுதி வரைபு தயாரிக்கப்பட்டு அது அரசியலமைப்பு சபையிலும், பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
நிறைவேற்று அதிகாரம் அளவுக்கதிகமாக பயன்படுத்தப்பட்டதால் பாராளுமன்றம் பலவீனப்பட்டது: ரணில் விக்ரமசிங்க
Wednesday, April 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment