Friday, April 28, 2017

கூட்டத்திற்கு போனால் மைக் பிடித்து பேச ஆசைப்பட்டார்கள், கோவிலுக்கு சென்றால் தலைப்பா கட்டி தமக்கு முதல் மரியாதை செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். கூட்டணி போட்டால் தலைவர் பதவி வேண்டும் என்று நிற்பார்கள். இது எல்லாம் போதாது என்று தற்போது இனப் பிரச்சினையில் கூட கோட் சூட் போட்டுக் கொண்டு சென்று யார் போஸ் கொடுப்பது என்று தான் அலைந்து திரிகிறார்கள் சில (மூ) தேவிகள்...

ஆறு மாதத்திற்கு ஒருக்கா ஐ.நா கூடுகிறதோ இல்லையோ. ஜெனிவாவில் உள்ள ஐ.நா கேட்ப்போர் கூடம். இல்லையென்றால் உணவு உண்ணும் இடத்தில் கோட் சூட்டுடன் சென்று 5 அல்லது 6 பேராக உட்கார்ந்து தாம் எழுதிக் கொண்டு சென்ற விடையத்தை வாசிப்பது. அதனை போட்டோ எடுத்து ஊடகங்களுக்கு அனுப்பி விட்டு. தாம் ஐ.நா மனித உரிமை சபையில் பேசி கிழி கிழி என்று கிழித்ததாக கூறி, பிதற்றுவது. விடையம் தெரியாத ஊடகங்கள் அவர்கள் படத்தை போட்டு செய்தி வெளியிட... உங்க பாருங்கே அவன் ஐ.நா வில நிக்கிறான் என்று 4 பேர் பேச. ஒரு பெருமையா , மிடுக்கோட 2 இங்கிலிஷ் வார்த்தை பேசுவது.

இதனை தான் கடந்த 8 வருடமா சிலர் செய்து வருகினம். சிலர் உணவு விடுதியில். சிலர் கேட்ப்போர் கூடத்தில் மீட்டிங்கை நடத்திவிட்டு பெருமையோடு வெளியே வந்து லங்கா ஸ்ரீக்கு பேட்டியும் கொடுப்பார்கள். நேற்று(27) பிரசில்ஸ்சில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கை வெற்றி பெற்றது. இலங்கைக்கு ஜி.எஸ்.பி + சலுகை கொடுக்க கூடாது என்று சில, MPக்கள் ஒரு பிரேரணையை கொண்டு வந்தார்கள்.இது கூட அந்த MPக்கள் சுயமாக எடுத்த முடிவு தான். ஆனால் இலங்கைக்கு ஜி.எஸ்.பி கொடுக்கவேண்டும் என்று 436 MPக்கள் வாக்கு போட கொடுக்க கூடாது என்று வெறும் 119 MPக்கள் மட்டுமே வாக்குபோட்டுள்ளார்கள். 22 MPக்கள் நடு நிலை வகித்துள்ளார்கள். ஜி.எஸ்.பி சலுகை கிடைத்தது என்று பிரசில்ஸ் நகரில் இருந்து ஹரிஷ் டி சில்வா இலங்கை ஊடகத்திற்கு சொன்ன வேளை, சிங்கள பகுதிகளில் வெடி கொழுத்தி கொண்டாடினார்கள்.

2009ம் ஆண்டுக்குப் பின்னர் இப்ப தான் சிங்களவர் மீண்டும் ஒரு வெற்றியடைந்தாக உணர்ந்துள்ளார்கள். அதனை கொண்டாடியும் உள்ளார்கள். இதில் தமிழர்கள் எங்கே பிழை விட்டுள்ளார்கள் என்று பார்போம்.

தமிழர்களில் பல பிரிவுகள். உங்களுக்கே தெரியும் 108 அமைப்புகள். எல்லாம் மாறி மாறி ஒரு விடையத்தை தான் பேசுகிறார்கள். ஆனால் ஒற்றுமை இல்லை. இதேவேளை சில விடையங்களை மாற்றி மாற்றி பேசுகிறார்கள். ஒரு MPயை  ஒரு தமிழ் குழு சந்தித்து ஒரு விடையத்தை சொன்னால். மற்ற குழு சந்தித்து வேறு ஒரு மாதிரி விளக்கம் கொடுத்து குட்டையை குழப்பி விடும்.

ஐரோப்பிய பாராளுமன்றில் மிக முக்கியமான நபர்களாக இருப்பது, ஐரோப்பிய MPக்கள் தான். அவர்களை எமது வசப்படுத்தாமல். தாம் ஏதோ MP என்பது போல, ஐ.நா மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் சென்று கேட்ப்போர் கூடத்திலும் சமையல் அறையிலும் சில தமிழர்கள் தாமே கூட்டம் நடத்தி , அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். இவர்கள் யார் ? பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், போன்ற நாடுகளில் வாழும் தமிழர்(செயல்பாட்டாளர்கள்)  குறைந்த பட்சம் ஐரோப்பிய MPக்களோடு பேசி இருந்தால் கூட சுமார் 230 MPக்களுக்கு மேலாக பல MPக்களை நாம் எமது பக்கம் ஈத்திருக்க முடியும்.

ஆனால் இதனை எல்லாம் விடுத்து, வெறுமனவே சீசனுக்கு சீசன் ஐ.நா சென்று கோட் சூட் போட்டுக்கொண்டு பேசி. பின்னர் புகைப்படம் எடுத்து ஊடகங்களுக்கு அனுப்பும் இவர்கள் போன்ற நபர்கள் கைகளில் தான் எமது விடுதலை இருக்கிறது என்றால் எவ்வளவு பெரிய முட்டாள்களாக நாம் இருக்கிறோம் என்பதனை நினைத்துப் பாருங்கள். சில MPக்கள் இலங்கைக்கு ஜி.எஸ்.பி சலுகை கொடுக்க கூடாது என்ற பிரேரணையை கொண்டுவர உள்ளார்கள் என்று அறிந்துகொண்ட இந்த தமிழர்கள். உடனே ஊடகத்திற்கு ஒரு செய்தியை கசிய விட்டார்கள். அது என்னவென்றால் ஏதோ ஐரோப்பிய பாராளுமன்றில் , இலங்கைக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்று. இதனால் ஜி.எஸ்.பி + கிடைக்காது என்று கூட பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு , மீண்டும் தமிழர்கள் ஏமாற்றியுள்ளது.

2009ல் இயக்கம் கல்-மடுக்கட்டு அணையை உடைத்து, அந்த தண்ணீர் பரவும் வேகத்தில் படகில் சென்று சுட்டு 5,000 இலங்கை ஆமியை கொன்றுவிட்டது. அவர்கள் மீண்டும் அடித்துப் பிடித்துவிட்டார்கள் என்று தமிழர்களுக்கு கூறி. உண்மையை மறைத்து பப்பா கொப்பில் ஏற்றி. பின்னர் தள்ளிவிட்டு. தமிழர்கள் இயக்கம் மேல் வைத்திருந்த நன் மதிப்பை எப்படி குறைத்தார்களோ. அதுபோல இப்படி பல தகவல்களை ஒரு குழு திட்டமிட்ட முறையில் கசிய விட்டு. தமிழர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றி வருகிறது. ஆனால் உண்மையில் ஒரு வேலைப்பாடும் நடந்ததாக இல்லை. பல குழுக்களும் அமைப்புகளும் இருக்கிறதே தவிர, தலைவருக்கு போட்டி போடுவது செயலாளர் பதவியை பிடிப்பது. என்று உட்கட்சி பூசல் நடக்கிறதே தவிர தமிழர்களின் விடிவுக்கு ஒன்று நடக்கவில்லை. இதுவே இன்றைய ஜதார்த்த நிலை:

அதிர்வுக்காக,

கண்ணன்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer