சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான நக்மா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
நாடு முழுவதும் வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் விவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது ரூ.77.200 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். எனினும் தேர்தல் முன் அளித்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படவில்லை. விவசாயி பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு மாநில அரசை கைகாட்டுவது தவறு.
தமிழக பெண்களை இழிவாக பேசிய கேரள அமைச்சர் மணியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் நக்மா கூறினார். தமிழகத்தில் தங்களை நிலை நிறுத்தி கொள்ள பாஜக பல வழிகளில் முயற்சி மேற்கொள்கிறது என்று நக்மா தெரிவித்தார்.
Friday, April 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment