Sunday, April 16, 2017

நாம் அருந்தும் காபி, டீயினை காட்டிலும் நம் உடலுக்கு சத்தினையும், புத்துணர்ச்சியினையும் தரவல்லவை பழச்சாறுகள்.

தினமும் ஏதேனும் ஒரு பழச்சாற்றினை அருந்தினால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.

ஒவ்வொரு சாற்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. அவற்றினை காணலாம்.

ஆப்பிள் பழச்சாறு

ஆப்பிள் பழச்சாற்றில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ஸ் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை சீராக்குகிறது. மேலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய நோய் வராமல் தடுக்கிறது.

இதில் உள்ள கிளைசெமிக்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சர்க்கரையினை கட்டுபாட்டில் வைக்கும். தொடர்ந்து ஆப்பிள் பழச்சாற்றினை குடித்து வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் தீரும்.

புற்றுநோயாளிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் கர்ப்பி?ணி பெண்கள் கட்டாயமாக இதனை பருக வேண்டும்.

அன்னாசி பழச்சாறு

அன்னாசி பழச்சாற்றினை குடிப்பதால் இரத்த குறைபாடு, தொண்டைபுண், இருமல் போன்றவை தீரும். கெட்ட கொழுப்பினை கரைக்கும் தன்மை உடையது.

அன்னாசியில் உள்ள விட்டமின் சி மற்றும் பி ஆனது செரிமான மண்டலம் சீராக இயங்க உதவுகிறது.

திராட்சை பழச்சாறு

திராட்சை பழச்சாற்றினை தொடர்ந்து அருந்தி வந்தால் ஆஸ்துமா, ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகள் தீரும்.

மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையுடையது. எனவே பெண்கள் இதனை அருந்தலாம். புற்றுநோய் உள்ள அனைவரும் இந்த பழச்சாற்றினை அருந்துவது பலன் தரும்.

மாதுளம்பழ சாறு

தினமும் மாதுளை சாற்றினை அருந்தி வந்தால் டெஸ்ட்ரோஜன் சுரப்பின் அதிகரித்து எலும்பு, தசை தொடர்பான பிரச்சனைகள் தீரும்.

பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டால் இரத்தசோகை, கர்ப்பப்பை, சினைப்பை தொடர்பான பிரச்சனைகள் தீரும்.

எலுமிச்சை சாறு

பொதுவாக அனைவரும் அருந்தும் சாறு எலுமிச்சை பழச்சாறாகும். இதில் விட்டமின் பி மற்றும் சி ஆனது உள்ளதால் டாக்ஸின்களை வெளியேற்றி சருமத்தினை அழகாக வைக்க உதவுகிறது.

இது புற்றுநோயினை குணப்படுத்தும் வல்லமை உடையது. அசைவ உணவிற்கு பின் இந்த சாற்றினை அருந்துவதால் செரிமானம் எளிதாகும்.

தொண்டைப்புண், மயக்கம் வரும் பிரச்சனை உள்ளவர்கள் இதனை தொடர்ந்து குடிக்கலாம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer