Monday, April 24, 2017

மருத்துவ குணம் அதிகமுடைய எளிதில் கிடைக்கக்கூடியது கற்றாழை. தற்போது அழகு சாதனப்பொருள்கள் தயாரிக்கவும் மருந்து பொருள்கள் தயாரிப்பிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இதன் இலைச்சாற்றில் ஆந்த்ரோகுயினோன், ரெசின்கள், பாலிசாக்கரைடு மற்றும் ஆலோக்டின்பி போன்ற வேதி பொருட்கள் உள்ளது.

கற்றாழை இருந்து வரும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம் எனப்படுகிறது.

வகைகள்

அதிக மருத்துவ குணங்களை உடையது கற்றாழை. இதில் பல வகைகள் உள்ளது. ஆனால் அனைத்து வகைகளும் மருந்திற்காக பயன்படுத்தப்படுவதில்லை.

சோற்றுக்கற்றாழை

சிறுக்கற்றாழை

பெரும்கற்றாழை

பேய்க்கற்றாழை

கருங்கற்றாழை

செங்கற்றாழை

ரெயில் கற்றாழை

இதில் சோற்றுக்கற்றாழை மட்டுமே மருந்துக்கள் தயாரிக்கவும், அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

கற்றாழை மடலினை பிளந்து அதில் உள்ள சதைப்பகுதியினை துண்டுகளாக்கி 7-10 முறை நீரில் கழுவி பயன்படுத்தினால் அதில் உள்ள கசப்பு தன்மையானது குறைந்துவிடும்.

பயன்கள்

கற்றாலை சாற்றினை தினமும் அளவோடு சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவாகும். உடல் குளிர்ச்சி அடையும்.

காலையில் வெறும் வயிற்றில் கற்றாழையினை சாப்பிடுவதால் குடலில் உள்ள நஞ்சனானது நீங்கி குடல் சுத்தமாகும். மேலும் மன இறுக்கம் குறையும்.

100கிராம் கற்றாழையுடன் 10கிராம் ஊறவைத்த வெந்தயத்தினை சேர்த்து 350மிலி விளக்கெண்ணெயில் காய்ச்சி காலை மாலை என இரு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறைந்து அழகான தோற்றம் கிடைக்கும். சருமம பொலிவுறும்.

முற்றிய கற்றாழையின் இடையில் சிறிது வெந்தயத்தினை வைத்து மூடி இரவு முழுதும் அப்படியே வைத்துவிடவேண்டும். காலையில் பார்க்கும் போது வெந்தயமானது முளைத்திருக்கும். அதை சாப்பிட்டால் தீராத வயிற்றுவலி, வயிற்றுப்புண் போன்றவை சரியாகும்.

கற்றாழை சோற்றினை மோரில் கலந்து குடிப்பதால் உடல் சூட்டினால் ஏற்படும் கட்டிகள், முகப்பரு, வெயிலினால் உண்டாகும் கருமை ஆகியவை மறையும்.

சோற்றுக்கற்றாழை சாற்றினை தினம் அருந்துவதால் இதயநோய்கள் ஏற்படுவது குறையும். இரத்தநாளங்களில் உள்ள கொழுப்பினை நீக்கிவிடும். மாரடைப்பு வருவது தடுக்கப்படுகிறது.

சோற்றுக்கற்றாழையில் உள்ள மெட்டாபாலிசமானது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை குறைக்கும்.

அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட தழும்புகளின் மீது கற்றாலை சாற்றினை தடவி வந்தால் நாளடைவில் தழும்பானது மறைந்துவிடும்.

கற்றாழையில் அதிகளவு ஈரப்பசை உள்ளதால் தினமும் முகத்தில் தடவி வந்தால் முதுமை தோற்றம் ஏற்படுவதை தடுக்கும்.

தேங்காய் எண்ணெய் கலந்து கற்றாழையினை காய்ச்சி தேய்த்து வ்ந்தால் முடி வளர்ச்சி அதிகமாகும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer