தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் இலங்கையில் களைகட்டியுள்ளன. இது தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் நாட்டின் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் வென்னப்புவ “ரன்வெலி” ஹோட்டலில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இதில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
அழகு ராணி தெரிவு, நீர் விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் இதில் அடங்கும்.
இந்த போட்டிகளில் அதிகமான வெளிநாட்டவர்கள் பங்கேற்றனர். சிங்கள கலாசார உடையில் பல வெளிநாட்டு பெண்கள் அழகு ராணி போட்டியில் பங்கேற்றமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது.
Thursday, April 13, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment