Tuesday, April 4, 2017

அட வெள்ளாவி வச்சுதான் வெளுத்தாங்களா? வெயிலுக்கு காட்டாமதான் வளர்த்தாங்களா? என்றொரு பாடல் ஆடுகளம் படத்தில் வரும்.
அதில்தான் அறிமுகமானார் டாப்ஸியும். அந்தப்படம் வந்து பத்து வருஷங்களாவது ஆகியிருக்கும்.

இப்போதும் மனசு குஷியாக இருந்தால், “நான் உங்க வெள்ளாவி பொண்ணு” என்கிறார் டாப்ஸி. திக்கி திணறி தமிங்கிலீஷ் பேசினாலும், அவர் பேசும் தமிழழகு! இவ்வளவு ஸ்பெஷலான பெண்ணைதான் ஆக்ஷன் கோழியாக்கிவிட்டார்கள் ஒரு படத்தில்.

‘நான்தான் ஷபானா’ என்ற பெயரில் உருவாகியிருக்கும் அப்படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடந்தது. உயிரை விட்டு ஆக்ஷன் பண்ணிய படமாச்சே? பிரமோஷனுக்கு தவறாமல் வந்து கலந்து கொண்டார் டாப்ஸி.

படத்திற்காக அது கத்துகிட்டேன். இது கத்துக்கிட்டேன் என்று அளந்து தள்ளினாலும், ஆக்ஷன் டைரக்டர் உதவியுடன் ஒரு பைட் ராணியாக உருவெடுத்திருக்கிறார் அவர்.

ட்ரெய்லரே முழு படத்தையும் சீக்கிரம் காட்டுங்கப்பா என்று ஆவலை தூண்டுவதால், மீண்டும் டாப்ஸிக்காக ஆடும் களம் ஆகிவிடும் தமிழகம். வாங்க வாங்க...

0 comments :

Post a Comment

 
Toggle Footer