நாட்டில் தொடர்ந்தும் இலவசக் கல்வியை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியே நாட்டில் இலவசக் கல்வி முறையை ஏற்படுத்தியது. ஆகவே, நாம் இலவசக் கல்வியை அழிக்க இடமளிக்க மாட்டோம் என்று நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பல்கலைக்கழகங்களின் தராதரங்களினைப் பாதுகாக்க எதிர்வரும் 2 மாதங்களுக்குள் புதிய சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படும். தனியார் மருத்துவ கல்லூரியை கடந்த அரசாங்கமே ஆரம்பித்தது. அன்று அதனை எதிர்க்காதவர்கள் இன்று தனியார் பல்கலைக்கழகங்களை எதிர்ப்பதாக காட்டுகிறார்கள். தனியார் மருத்துவ கல்லூரி பற்றி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்வது அவசியமாகும். அரசாங்கம் சகல பல்கலைக்கழகங்களுக்கும் சகல வசதிகளையும் வழங்கியிருக்கின்றது.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
இலவசக் கல்வியைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது: லக்ஷ்மன் கிரியெல்ல
Friday, April 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment