Tuesday, April 4, 2017

நடைபெறவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கா.கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி வேட்பாளருக்காக இரண்டாம் நாளாக 02-04-2017 (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணியளவிலும் மாலை 4 மணியளவிலும், இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் 39 வது வட்டத்தில் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு, சுங்கச்சாவடி, எம்.ஜி.ஆர் சாலை அருகே சீமான் தலைமையில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer