Wednesday, April 26, 2017

1960-70-களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் 'சாவித்திரி'.இவரது நடிப்பு திறமையால் 'நடிகையர் திலகம்' என தமிழிலும், 'மகாநதி சாவித்ரி' எனத் தெலுங்கிலும் அழைக்கப்பட்ட இவர், என்.டி.ஆர், ஏ.என்.ஆர், எம்.ஜி.ஆர், சிவாஜி, அவருடைய கணவர் ஜெமினி கணேசன் என தென்னிந்திய சினிமாவின் அனைத்து முன்னணி நட்சத்திரகளுடனும் நடித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் உள்ள நடிகைகள் கூட 'சாவித்திரி' போல் நடிக்க விரும்புவதாக கூறி வரும் நிலையில், அவரது வாழ்க்கையோ, எவரும் கண்டிராத துரோகம், ஏமாற்றம், வறுமை, ஏற்றத் தாழ்வு என பல சூழல்களை கண்டுள்ளது.

பல திருப்பங்கள் நிறைந்த இவர் வாழ்ககை கதையை மையமாக வைத்து  இயக்குனர் நாக் அஸ்வின் ‘மகாநதி’ என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இயக்க உள்ளார் என முன்பே தெரிவித்திருந்தோம். இதில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷும், அவரது வாழ்க்கையை விவரிக்கும் கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடிக்க உள்ளர் என்ற தகவலும் நாம் அறிந்ததே. இது தவிர சாவித்திரியுடன் இணைந்து நடித்த நட்சத்திர நடிகர்களின் கதாபாத்திரத்தில், யார் யார் நடிக்க உள்ளார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும்  நிலவி வந்தது.  நடிகை சாவித்திரியின் வாழ்க்கையில் மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் மிக முக்கியமானவர் என்பதால் அந்த கதாபத்திரத்தில் யார் நடிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்த  நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மானை படக்குழு தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer