Monday, April 24, 2017

தயாரிப்பாளர்களின் வளர்ச்சிக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வாக்குறுதியோடு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் விஷால்.. தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இளையராஜா அவர்களுக்கு மிக பிரம்மாண்ட பாராட்டு விழா,  பாடல்கள், கிளிப்பிங்ஸ் மற்றும் டிரைலர்  போன்ற எதுவும் இனி எந்த ஒரு தொலைக்காட்சிக்கும் இலவசம் கிடையாது, தமிழ் ராக்கர்ஸ் வலையத்தை முடக்கி காட்டுவேன் என்கிற சவால்களோடு மாஸ் கிளப்பிவரும் விஷால் நேற்றும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், இனி தியேட்டரில் படம் ஓடும்போது அதை கேமரா வைத்து காப்பி செய்து, திருட்டு விசிடி, பைரசி தயாரிக்க உதவுவோரை பிடித்து... தியேட்டர் நிர்வாகிகளிடம் ஒப்படைத்து, மேலும் போலீஸிலும்  எஃப்.ஐ.ஆர்.போட உதவுபவருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகளால் திருட்டு விசிடி தயாரிப்பை கட்டுப்படுத்த முடியும் என்பது அவரது நம்பிக்கை.

0 comments :

Post a Comment

 
Toggle Footer