Tuesday, April 4, 2017

காலையில் வெறும் வயிற்றில் 2 டீஸ்பூன் பப்பாளி விதையுடன், 1 டீஸ்பூன் தேன் கலந்து ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஏராளாமான நன்மைகளை பெறலாம்.

பப்பாளி விதையுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பப்பாளி விதை மற்றும் தேனில் உள்ள சக்தி வாய்ந்த அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆன்ஸிடன்ட்கள் வயிற்றில் உள்ள நச்சுக்களை வெயியேற்றி உடலை முழுமையாக சுத்தம் செய்ய உதவுகிறது.

பப்பாளி மற்றும் தேனில் உள்ள அமிலங்கள் வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து, செரிமானத்தை சீராக்குகிறது.

பப்பாளி விதை, தேன் கலந்த கலவையில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் உள்ளது. எனவே இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

பப்பாளி விதை மற்றும் தேன் கலந்த கலவையில் அதிகப்படியான புரதச்சத்து உள்ளது. எனவே, அது நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அழகான கட்டுக்கோப்பான உடலை பெற உதவுகிறது.

தேன் மற்றும் பப்பாளி விதை கலந்த கலவையில் குளுக்கோஸ் அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள சோர்வுடன் போராடி உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.

பப்பாளி விதையில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆன்ஸிடன்ட்கள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் காய்ச்சல் மற்றும் நோய் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கிறது.

பப்பாளி விதை மற்றும் தேன் கலந்த கலவையில் சில வகை எம்சைம்கள் உள்ளது. அவைகள் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer