தமன்னாவின் ‘யௌவனம்’ சற்றொப்ப முடிந்துவிட்டது. (அதென்னய்யா யௌவனம்? என்பவர்கள் தமிழ் அகராதிக்குள் புதைந்து கிடக்கக் கடவது) இதற்கப்புறமும் காதல் கத்தரிக்காய் என்று மரத்தை சுற்றி வந்து ஆடினால், அந்த கிளைகளே கூட சும்மாயிருக்காது என்பதை புரிந்து கொண்டிருக்கிறார். இனி வரும் கதைகளை அதற்கேற்ப தேர்ந்தெடுக்க நினைத்தவர், சட்டென்று முடிவெடுத்தது ஆக்ஷன் சப்ஜெட்டுகளைதான். ஒரு விஜயசாந்தி வந்து அநேக வருடங்கள் ஆகிவிட்டது.
பாகுபலி புண்ணியத்தில் மார்ஷியல் ஆர்ட் அனைத்தையும் கற்று வைத்திருக்கும் தமன்னா, இனி வரும் காலங்களில் அடிதடி படங்களுக்கே அதிக முக்கியத்துவம் தர முடிவெடுத்திருக்கிறாராம். இந்த விஷயத்தை மெல்ல கோடம்பாக்கத்தில் பரவவிட்டாலும், புலி இளைச்சா பூனையும் ஆகாது. பூனை பெருத்தா புலியும் ஆகாது என்று தடுப்பணை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள் இப்பவே!
Friday, April 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment