ஹெய்டி நாட்டில் சேவையாற்றும் இலங்கை படையணியின் கட்டளை அதிகாரி உட்பட, 134 படையினர் 9 சிறார்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உள்ளக அறிக்கை தற்போது உறுதிசெய்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கை ராணுவத்தை சேர்ந்த கட்டளை தளபதியை, ஐ.நா அமைதிகாக்கும் படையினர் தற்போது வேலையால் நிறுத்தியுள்ளதாகவும் அதிர்வு இணையம் அறிகிறது.
பிஸ்கட், பணம் மற்றும் பழங்களை கொடுத்து, 14 வயது முதல் 15 வயது சிறுவர்களை இலங்கை ராணுவம் வளைத்து போட்டு அவர்களோடு உறவில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும். மேலும் பருவமடையாத 13 வயது சிறுமி ஒருவரோடு மட்டும் சுமார் 50 இலங்கை ராணுவத்தினர் உறவு வைத்துள்ளார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஹெய்டி நாட்டில் சேவையாற்றி வந்த 114 இலங்கை இராணுவத்தினர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் எவருக்கும் அன் நாட்டில் சிறை தண்டனை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் தகவல் வழங்கியுள்ள 16 வயதான சிறுமி இலங்கை படையணிக்கு கட்டளை வழங்கும் அதிகாரி தன்னை மூன்று முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறியுள்ளார். பணம், பிஸ்கட், டொபி, சொக்லட் மற்றும் பழங்களுக்காக தாம் ஐ.நா அமைதிகாக்கும் படையினருடன் பாலியல் தொடர்புகளை கொண்டிருந்தாக 14 வயதான சிறுமி கூறியுள்ளார். இதனை தவிர தாம் 100க்கும் மேற்பட்ட இலங்கை படையினருடன் பாலியல் தொடர்புகளை கொண்டிருந்ததாக 15 வயதான சிறுவன் ஐ.நா விசாரணையாளர்களிடம் கூறியுள்ளார்.
Home
»
Sri Lanka
»
பிஸ்கட், பணம் ,பழங்களை காட்டி இலங்கை ராணுவம் செக்ஸ்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல் இதோ..
Wednesday, April 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment