Saturday, April 15, 2017

“விஷால் ஒரு நடிகர். பிரகாஷ் ராஜ் ஒரு நடிகர். இவங்க ஜெயிச்சு வந்தா தயாரிப்பாளர் பக்கம் இருப்பாங்களா, ஆர்ட்டிஸ்ட் பக்கம் இருப்பாங்களா?

சிந்திச்சு ஓட்டுப் போடுங்க” இப்படி ஓட்டு வேட்டையில் இறங்கிய தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு பிரிவினருக்கு விஷால் டீம் வெற்றி பெற்றதில் அப்செட்தான். ஆனால் அவர்களது எண்ணத்தை பொடி பொடியாக்கியிருக்கிறது இந்த புது டீம். எப்படி? பா.பாண்டி படத்தின் ஹீரோயின் மடோனா, பிரமோஷன்களுக்கு வருவதாக அக்ரிமென்ட்டில் கையெழுத்துப் போட்டிருந்தார்.

ஆனால் அழைத்தபோது, “வர முடியாது” என்று கூறிவிட்டாராம்.

கம்ப்ளைன்ட் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வர, மடோனாவை போனில் அழைத்து லெப்ட் ரைட் வாங்கிவிட்டார்களாம் விஷாலும், பிரகாஷ்ராஜும். நீ இந்தியாவில் எந்த லாங்குவேஜுலேயும் நடிக்க முடியாது. பார்த்துக்கோ... என்று இவர்கள் போட்ட சப்தத்தில் பெட்டிப் பாம்பாக அடங்கிவிட்டார் மடோனா. நீங்க எங்க வரணும்னு சொல்லுங்க. நான் அங்க வந்து நிற்பேன் என்றாராம். பிரச்சனை சால்வ்டு!

0 comments :

Post a Comment

 
Toggle Footer