Wednesday, April 12, 2017

தாய்வானில் வளர்ப்பு செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனை ஆகியவற்றின் இறைச்சியை மக்கள் உண்பதற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

பொதுமக்கள் மத்தியில் விலங்குகள் மீதான ஜீவகாருண்யத்துக்கு ஆதரவான குரல் வலுப்பெற்றதை அடுத்தே இந்த உத்தரவு புதன்கிழமை சட்ட வல்லுனர்களால் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

மேலும் இந்த சட்டத்தின் படி சட்ட விரோதமாக நாய் அல்லது பூனை இறைச்சி விற்றுப் பிடிபட்டால் ஒரு நபருக்கு சுமார் 250 000 தாய்வான் டாலர் அபராதம் விதிக்கப் படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் இந்த விலங்குகளைக் கொலை செய்வது அல்லது துன்புறுத்துவது தெரிய வந்தால் 2 மில்லியன் டாலர் அபராதம் அல்லது இரு வருட சிறைத் தண்டனை பெறவும் வாய்ப்புள்ளது என அறிவிக்கப் பட்டுள்ளது. சில தசாப்தங்களுக்கு முன் நாய் இறைச்சி விற்பனை தாய்வானில் சாதாரணமான ஒன்றாக இருந்த போதும் அண்மைக் காலமாகக் கடுமையான சட்டதிட்டங்கள் மூலம் இது அருகி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer