Tuesday, April 4, 2017

கொழும்பு மாலபே தனியார் மருத்துக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினை எதிர்வரும் 07ஆம் திகதி முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும், தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகள் அனைத்திலும் அவசர நோயாளர் சேவைகள் இடம்பெறும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, "இது இலங்கை வைத்திய சேவையிற்கு தரமற்ற வைத்தியர்களை அரசியல் செல்வாக்குக்காகவும், பணத்துக்காகவும் உருவாக்கி நோயாளர்களின் உயிரை பணயம் வைக்கும் அரசியல் வியாபாரிகளுக்கு எதிரான போராட்டம் ஆகையினால் எம்முடன் இம்முறை நூற்றுக்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கைகோர்த்துள்ளன. போராட்ட தினம் கொழும்பில் மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறும்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer