வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள கவுரோ நகரத்தில் அமைந்துள்ள இந்து ஆலயங்களின் சிலைகள் உடைக்கப் பட்டுள்ளன. மேலும் அவை கழிவு நீரில் வீசி எறியப் பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மூவர் மீது பாகிஸ்தான் போலிசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்யத் தேடி வருகின்றனர்.
பிபிசி வெளியிட்ட செய்தியில் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் 12 வயதுடைய ஒரு சிறுவனது காலடித் தடங்களை வைத்து இச்சம்பவத்தில் அவனுக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப் படுவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் கவுரோ நகரத்தில் இதுபோன்ற மதத் துவேச சம்பவம் இதுவே முதன் முறையாக நடைபெறுவதாகவும் தெரிய வருகின்றது.
கராச்சியில் இருந்து 60 Km தொலைவில் அமைந்துள்ள கவுரா நகரத்தில் 2000 இற்கும் அதிகமான இந்து குடும்பங்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sunday, April 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment