Monday, April 24, 2017

வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க அதன் மேலே தெர்மாக்கோல் மிதக்கவிடும் பணியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். ஆனால், அந்த தெர்மாக்கோல்கள் அடுத்த சில விநாடிகளிலேயே காற்றில் அடித்து செல்லப்பட்டு கிழிந்து கரை ஒதுங்கின.

சரியான ஆய்வும், திட்டமிடலும் இல்லாமல் நடைபெற்ற இந்த சம்பவம் மிகவும் விமர்சனத்திற்குள்ளானது. இதை விமர்சனம் செய்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கேலி கிண்டல் வந்த  வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் இன்று, இயக்குநர் அட்லி  தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்  நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார்.   விழாவில் அவர் பேசும்போது, ‘’ஆவியை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் கதையாக இருக்கலாம்.  திரைப்படம் ஆவி கதையாக இருந்தாலும் தெர்மாகோல் போட்டு மூடுவதாக இருக்காது.  ஆவியென்றாலும் தர்மா கூலால் மறைக்க முடியாது’’ என்று கூறியதும், விழா அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer