நாம் தினசரி எடுத்து கொள்ளும் உணவில் கட்டாயம் 4:3 என்ற விகிதத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நிறத்திலும் உள்ள பழங்கள், காய்கறிகளிலும் சத்துக்கள் வேறுபடும். அதிலும் மஞ்சள் நிற பழங்கள், காய்கறிகளில் தான் அதிக சத்தானது உள்ளது. இதனை உணவில் சேர்த்து கொள்வது அவசியமாகும்.
மஞ்சள் நிற பழங்கள், காய்கறிகளில் விட்டமின்கள், கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளது. இது உடல்நலத்தினை பாதுகாக்க உதவுகிறது.
பயன்கள்
மஞ்சள் நிற பழங்கள், காய்கறிகளில் கரோட்டினாய்டு சத்தானது அதிகமுள்ளது. இதனை செரிமானத்தின் போது நமது உடலானது விட்டமின் ஏ-வாக மாற்றுகிறது.
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸைடுகள் செல் சிதைவினை தடுக்கிறது. மேலும் பீட்டா கிரிப்டோசாக்தின் மற்றும் விட்டமின் சி யானது செல்களை பாதுகாக்க உதவுகிறது.
விட்டமின் ஏ வானது கண்பார்வையினை மேம்படுத்த உதவுகிறது. கண்ணில் தசை சீர்கேட்டினை குறைத்து பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது.
மஞ்சள் நிற பழங்கள், காய்கறிகளில் உள்ள கரோட்டினாய்டுகள் புற்றுநோய் செல்கள் வளருவதை குறைத்து, மார்பக புற்றுநோய் பிரச்சனை உண்டாவதை தடுக்கிறது.
மேலும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. செரிமான பிரச்சனைகள் உண்டாவதை குறைக்கிறது.
தினசரி நமது உணவில் வாழைப்பழம், பப்பாளி, பூசணிக்காய், சோளம், உருளைகிழங்கு, மாம்பழம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம்.
Wednesday, April 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment