இப்படிப்பட்டவர்களை வைத்துக் கொண்டு எப்படிதான் குப்பை கொட்டப் போகிறாரோ விஷால்?
புதிய டீம் பதவியேற்று முதல் செயற்குழு கூட்டம் துவங்கியது. பொதுவாக இதுபோன்ற கூட்டங்களில் இதற்கு முன் நடந்த தில்லுமுல்லுகள் இந்த முறை நடந்துவிடக் கூடாது என்பதில் படு கவனம் செலுத்தி வரும் விஷால், எல்லாரும் செல்போனை இந்த மீட்டிங் ஹாலுக்கு வெளியில் வைத்துவிட்டு வர வேண்டும் என்று உத்தரவு போட்டுவிட்டார்.
ஏனென்றால், பிரச்சனை யார் குறித்து நடக்கிறதோ.... அவருக்கே லைவ் செய்யும் வழக்கம் இதற்கு முன் இருந்து வந்ததாம். விஷால் பேச்சை எல்லாரும் கேட்டு செல்போனை வெளியிலேயே விட்டு விட்டு வந்தாலும், இரண்டு பேர் மட்டும் “அதெல்லாம் என்னால முடியாது” என்று செல்போனுடன் உள்ளே வந்தார்களாம். அன்று மட்டுமல்ல... அதற்கப்புறம் நடைபெற்ற எல்லா மீட்டிங்கிலேயும் இந்த ஒத்துழையாமை நடக்க... ஒன்றும் சொல்ல முடியாமல் மென்று முழுங்கி வருகிறாராம் விஷால்.
Wednesday, April 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment