“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளைத் தேடி மாதக் கணக்காக நாங்கள் வீதியில் காத்திருக்கிறோம். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ எங்களைக் கண்டுகொள்ளாது ஆலயங்களிலும் விகாரைகளிலும் வழிபாடுகளுக்காக சென்று கொண்டிருக்கின்றார். எங்களைக் கண்டுகொள்ளாத ஜனாதிபதிக்கு கடவுள் ஆசிர்வாதம் வழங்கமாட்டார்.” என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய பதிலை வழங்கக் கோரி கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் வளாகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று புதன்கிழமை 59வது நாளாக தொடர்கின்றது. அங்கு, தாயொருவர் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாங்கள் ஜனாதிபதியின் தாய்க்கு, சகோதரர்களுக்கு சமனானவர்கள்; இந்த வயதில் எங்களது உறவினர்களைத் தேடி இப்படி மாதக்கணக்கில் போராடி வருகின்றோம். எங்களுக்கு எந்த ஒரு பதிலையும் வழங்காத ஜனாதிபதி, ஆசிவேண்டி நயினாதீவு, நாகபூசணி அம்பாள் ஆலயம், நாகவிகாரை ஆகியவற்றில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். மாதக்கணக்கில் வீதியில் இருந்து பல துன்பங்களை அனுபவித்து, உறவுகளை நினைத்து கதறும் எங்களைப்போன்ற எத்தனையோ உறவினர்கள் கண்ணீர் வடிக்கின்ற போது, அவருக்கு எப்படி ஆசி கிடைக்கும். எங்களின் கண்ணீரை துடைப்பதன் மூலம் தான் அவருக்கு நல்லாசி கிடைக்கும்”என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
மாதக் கணக்கில் நாங்கள் வீதியில் காத்திருக்கிறோம்; காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர்!
Wednesday, April 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment